முகுந்த மாலா 13 | Mukunda Mala Stotram 13 in Tamil with Meaning
முகுந்த மாலா 13
ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்
கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா³꞉ காதரத்வம் |
ஸரஸிஜத்³ருஶி தே³வே தாவகீ ப⁴க்திரேகா
நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவஶ்யம் || 13 ||
விளக்கம்:
ஓ மனமே ஆழமானதும் கடக்க முடியாததுமான பிறவிக்கடலை எப்படி கடப்பேன் என்று அச்சத்தை அடையாதே தாமரைக்கண்ணனும் நரகனை அளித்தவனுமான தேவனிடத்தில் வைக்கப்பட்ட உன்னுடையதான பக்தி ஒன்றே தவறாமல் கடத்திவிடும்.