முகுந்த மாலா 21 | Mukunda Mala Stotram 21 in Tamil with Meaning

முகுந்த மாலா 21 | Mukunda Mala Stotram 21 in Tamil with Meaning

ஹே கோ³பாலக ஹே க்ருபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே
ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ |
ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்
ஹே கோ³பீஜனநாத² பாலய பரம் ஜானாமி ந த்வாம் வினா || 21 ||

விளக்கம்:

ஆநிறை மேய்த்தவனே, கருணைக் கடலே கடலின் மகளான லஷ்மியின் பதியே கம்ஸனை மாயத்தவனே கஜேந்திரனைக் கருணையால் காத்தவனே, மதவனே, பலராமனின் தம்பியே! மூவுலகுக்கும் ஆசிரியனே! தாமரைக் கண்ணனே கோப ஸ்த்ரீகளின் அன்பனே! என்னை காப்பாற்று உன்னைத் தவிர வேறொருவரை நானறியேன்.