முகுந்த மாலா 22 | Mukunda Mala Stotram 22 in Tamil with Meaning

முகுந்த மாலா 22 | Mukunda Mala Stotram 22 in Tamil with Meaning

ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணிஸ்த்ரைலோக்யரக்ஷாமணி꞉
கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி꞉ ஸௌந்த³ர்யமுத்³ராமணி꞉ |
ய꞉ காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி꞉
ஶ்ரேயோ தே³வஶிகா²மணிர்தி³ஶது நோ கோ³பாலசூடா³மணி꞉ || 22 ||

விளக்கம்:

எவன் பக்தர்களின் ஆபத்துக்களாகிய பாம்பிற்கு கருட ரத்தினமும் மூவுலகையும் ரக்ஷிக்கும் ரத்தினமும் ஆயர்குலப் பெண்களின் கண்களாகிய சாதக பக்ஷிகளுக்கு மேகமாகிய ரத்தினமும் அழகின் அடையாள மணியும் பெண்குல ரத்தினமான ருக்மிணிதேவியின் – பெரிய ஸ்தனங்களுக்கு அலங்கார ரத்தினமும், ஆயர் குலச் சூடாமணியுமான பகவான் நன்மையை அளிப்பானாக.