கருடன் கனவில் வந்தால் என்ன பலன் | Garudan Kanavil Vanthal Enna Palan

கருடன் கனவில் வந்தால் என்ன பலன் | Kanavil Kalugu Vanthal Enna Palan | Garudan Kanavil Vanthal Enna Palan

தூங்கும்போது கனவு வருவது வழக்கம். ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து பல வித கனவுகள் வருவது உண்டு. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தெய்வங்கள், கோவில் கோபுரங்கள், சாமி சிலைகள், இது போன்ற நிறையவை ஒருவரது கனவில் வரலாம். இந்த பதிவில் கருடன் என்று அழைக்கப்படும் கழுகு கனவில் வந்தால் என்ன பலன் என்பதைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

கருடன் கனவில் வந்தால் என்ன பலன்

உங்களுடைய கனவில் கழுகு உங்களை துரத்துவது போலவோ, உங்களை கொத்துவது போலவோ அல்லது கழுவு உங்க வீட்டில் இருப்பதை போலவோ, கழுகும் பாம்பும் சண்டை போடுவது போலவோ கனவு ஏதேனும் வந்து இருந்தால் அதற்கான என்ன பலன் என்பதை கீழே தெளிவாக கொடுத்துள்ளோம்.

கழுகை பார்த்து பயப்படுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

 • உங்கள் கனவில் கலையினை பார்த்து நீங்கள் பயப்படுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறீர்கள் என்பதை இந்த கனவு சுட்டிக் காட்டுகிறது.
 • அதனால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாக இது இருக்கும்.
 • எனவே நீங்கள் உங்களுக்கு தெரியாத நபர்கள் ஏதேனும் உங்களுடைய பேசினாலோ அல்லது அறிமுகமானாலோ எச்சரிக்கையாக இருந்து விடுங்கள்
 • பெருமாள் வழிபடும் கருட வழிபாடும் கருட ஜெயந்தி வழிபாடும் நல்வழிக்கு வழிவகுக்கும்.

கருடன் உங்களை தாக்குவது போல் கனவு வந்தால் என்ன பலன்

 • நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கருடன் உங்களை தாக்குவது போல் கனவு வந்தால் உங்களுடைய வேலை மற்றும் பண ரீதியாக மற்றும் உடல் ரீதியாக கஷ்டத்தினை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று இந்த கனவு உணர்த்துகிறது.
 • பெருமாள் வழிபடும் கருட வழிபாடும் கருட ஜெயந்தி வழிபாடும் நல்வழிக்கு வழிவகுக்கும்.

கழுகு மேலே பறப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:

 • கழுகு உங்க கனவில் மேலே பறப்பது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கைப் பாதையில் நீங்கள் முன்னேறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்
 • பெருமாள் வழிபடும் கருட வழிபாடும் கருட ஜெயந்தி வழிபாடும் நல்வழிக்கு வழிவகுக்கும்.

கழுகு கூட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

 • கழுகு கூட்டில் இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு ஒரு நல்ல நட்பு கிடைக்கும் என்று அர்த்தம்.

கழுகு வீட்டில் இருப்பது போன்ற கனவு கண்டால் என்ன பலன்

 • உங்க வீட்டில் குழந்தை பிறக்க இருப்பதையும்
 • தொழிலில் லாபம் பெற இருப்பதையும்
 • நல்ல வேலை கிடைக்க இருப்பதையும் குறிக்கிறது

பாம்பு உடன் சண்டையிடும் கழுகை கனவில் கண்டால் என்ன பலன்

 • இந்த கனவு, நீங்கள் மனம் கொந்தளிப்புடன் இருப்பதையும் மனதை கட்டுப்படுத்தி இருப்பதையும் உணர்த்துகிறது.

கூண்டில் இருக்கும் கழுகை கனவில் பார்ப்பது போல் கண்டால் என்ன பலன்

 • கூண்டில் இருக்கும் கழுகை கனவில் பார்ப்பது போல் கண்டால் உங்களை சிலர் அவமானப்படுத்த நினைப்பார்கள்.
 • எனவே உங்கள் எதிரானவர்களிடம் கவனமாக இருக்குமாறு அர்த்தம்.