முகுந்த மாலா 28 | Mukunda Mala Stotram 28 in Tamil with Meaning

முகுந்த மாலா 28 | Mukunda Mala Stotram 28 in Tamil with Meaning

நாதே² ந꞉ புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி ஸுரே நாராயணே திஷ்ட²தி |
யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேஶமல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் || 28 ||

விளக்கம்:

மூவுலகங்களுக்கும் ஒரே தலைவனும் மனத்தால் வணங்கத்தக்கவரும் தன்னுடையதான ஸ்தானத்தை அளிப்பவனும் புருஷோத்தமனுமான நாராயணனென்னும் தேவன் நமக்கு நாதனாக இருக்கும்போது சிலக்ரமங்களுக்கு மட்டுமே தலைவனும் சொற்பமாகப் பணம் அளிப்பவனுமான யாரோ ஒரு தரக்குறைவான மனிதனை வேலைக்காக தேடி அலைகிறோம். ஆச்சரியம்! நாம் மூடர்கள் அற்பமானவர்கள்.