முருகன் ஸ்துதி
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா-பூக்குங்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி!