Thayumanavar Songs – சுகவாரி
9. சுகவாரி இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன் எனருசித் திடவலியவந் தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர் இடையறா துருகிநாடி உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும் ஓய்ந்துயர்ந் தவசமாகி உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடிகாண் கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக் கருதிநகை யாவளதுபோல் சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை தோற்றிற் சுகாரம்பமாஞ் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 1. அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந்தென்னை …