பெண் கருவுற, சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பெண்கள் கருவுற சொல்ல வேண்டிய மந்திரம் மற்றும் சுகப்பிரசம ஆக அவர்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை இந்த பதிவில் பார்ப்போம்…

ஒருவரின் அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் என்பார்கள். இந்த மூன்றும் நிறைவேறினால் அடுத்து அவன் எதிர்பார்ப்பது நல்ல துணை. திருமண வயதானதும் திருமணம் செய்யக் கூடிய தம்பதிகள் தன் சந்ததியை விரிவாக்க குழந்தை செல்வத்தைப் பெற்றெடுக்கின்றனர்.

பலருக்கு ஆண்டவன் அருளால் திருமணம் ஆனதும் குழந்தை செல்வம் கிடைத்துவிடுகிறது. சிலருக்கு அந்த செல்வம் கிடைக்காமல் தள்ளிப்போவது உண்டு.

அதன் வழி அந்த தம்பதிகளுக்கே தெரியும். அப்படி குழந்தை செல்வத்திற்காக ஏங்கக் கூடிய தம்பதிகள் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வர பெண் கருவுற பெண்கள் கருவுற என்ன ஸ்லோகம் சொல்லி வழிபடலாம். இந்த மந்திரத்தை தினமும் வீட்டில் விளக்கேற்றி சொல்வதால் நல்லது. தம்பதியாக அமர்ந்து சொல்வது விசேஷம்.

திருமாலின் சயன கோல வகைகள் மற்றும் சயன கோயில்களின் சிறப்பம்சங்கள்

காலையில் நீராடி சூரியோதய வேளையில் விளக்கேற்றி, தேன் நிவேதனமாக வைத்து, அம்மன் படத்திற்கு முன் 12 முறை சொல்லி வழிபடவும். அதன் பின்னர் அந்த தேனை பருக வேண்டும். இப்படி செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கதா காலேமாத, கதய கலிதாலக்த கரஸம்
பிபேயம் வித்யார்த்தி தவசரண நிர்ணே ஜன ஜலம்!
ப்ரக்ருத்யா மூகானாம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணி.முக்கமல..தாம்பூல ஸதாம்

சிசேரியன் முறையில் குழந்தை பிறக்கும் போது ஜாதக பலன் சரியாக அமையுமா?

சுக பிரசவம் ஏற்பட
இப்படி கர்ப்பம் தரித்த கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய ஸ்லோகம் கூறி வழிபடலாம்

ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!

இந்த 5 ராசி பெண்கள் மிகச்சிறந்த தாய்மைப் பண்புகளை கொண்டிருப்பார்கள்

இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணி பெண்கள் தினமும் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் தேவியை நினைத்து மூன்று முறை சொல்லி வர பரம க்ஷேமங்கள் ஏற்படும்.

ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுபபிரசவம் அடைந்த பெண்கள் ஸ்ரீ தாயுமான ஸ்வாமிக்கு தாரோடு வாழைப்பழம், பசும்பால் அர்ப்பணம் செய்வது நற்பலனைத் தரும்.

வெளியூரை சேர்ந்தவர்கள் பெண் கருவுற்றதிலிருந்து, குழந்தை பெற்றெடுக்கும் வரை தினமும் சொல்லிக் கொண்டிருந்தாலே போதுமானது