Senthilandavar Thirupalli Eluchi in Tamil

Senthilandavar Thirupalli Eluchi in Tamil

In Hindu rituals, Thirupalli Eluchi is a song which is used to wake up Gods in the early morning. And various thirupalli Eluchi Songs are written for each gods. Here we are presenting Lord Murugan / Senthilandavar Thirupalli Eluchi in Tamil text. Lord Murugan blessings stay with us.

செந்திலாண்டவர் திருப்பள்ளி எழுச்சி

1. வெற்றி வேற்கர முடையாய் எமையுடையாய்
விடிந்ததுன் பூங்கழற்கிணை மலர்கொண்டு
சுற்றிய அடியோங்கள் தூயமனத்துடனே
சொல் மகிழ்வுடன் நின் திருவடி தொழுவோம்
தெற்றிய கமலங்கள் அலரும் தண்வயல் சூழ்
திருச்செந்திலம்பதி வாழ் முருகோனே
எற்றுயர் சேவர் பாதகையையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

2. கீழ்த்திசை அருணனும் கிளரொளி வீச
கிளிமயில் குயில் காகம் சேவல்கள் கூவ
காரிருள் நீக்கிடும் கதிரவன் வரவும்
கடிமா மலருடன் ஏந்திய கையார்
தாழ்ந்திடும் சென்னியர் தவமுடை பெரியோர்
தனித்தனி நாமங்கள் புகலுவார் நாவில்
ஏழிசை பரவும் நற்செய்திலம்பரனே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

3. வெண் சங்குமுழங்கின விலையொலி பேரி
வித வித வாத்தியங்கள் ஒலித்தன பலவால்
தண்ணருள் சுரந்திடும் தளிர் மலர்ப்பாதங்கள்
சார்ந்துடன் தெரிசிக்க யாவரும் வந்தார்
பண்ணிசைவேதியர் வேதம்முழங்கி
பனிமலர்த் தூவியே பரவினர் மருங்கில்
எண்ணரும் செந்தியில் இசைந்தமர் முருகா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

4. பாற்குடம் காவடி பக்தர்கள் ஒருபால்
பரிவுடன் வழிபடும் அன்பர்கள் ஒருபால்
நாற்றிசையோர் திரை கொணர்ந்தனர் ஒருபால்
நலமுடன் தமிழ்மறை ஒலிப்பவர் ஒருபால்
பாற்கடல் துயின்றோனும் பிரமனும் ஒருபால்
பண்புடன் ஊர்வசி அரம்பையர் ஒருபால்
ஏற்குரும் ஒளிதிகழ் செந்திலமர்ந்தோய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

5. பஞ்ச பூதங்கள் யாவும் பரவி நின்றோய் என்றும்
பார்க்குமிடந்தோறும் பண்புற அமர்ந்தாய்
எஞ்சலில் இசையுடன் ஏற்றுதல் அல்லால்
என்புருகவும் நினைக்கண்டறியோம் யாம்
தஞ்சமென்றடியவர்க்கருளும் செந்தூரா
சதுர்மறை யூடுறை ஷண்முகநாதா
எஞ்சிய பழவினை அறுத்தெமையாண்ட
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

6. செப்பரும் அடியவர் தனியிருந்துணர்வார்
செய்வினை யகற்றிடுவார் தவர் பலரும்
ஒப்பரும் இருடுகள் தம்மனையோடும்
உவமையில் ஜெபத்தோடு ஒன்றியே அமர்ந்தார்
செய்ப்பெறும் நீள்வயல் சூழ்ந்திருச்செந்தூர்
சிறப்புடன் அமர் சிவசுப்பிரமணியா
எப்பிறப்பினும் உனை ஏத்திட அருள்வாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

7. தேனினி தெனக்கண்டு பால் இனிதெனவே
செப்புகின்ற அமுதம் இனிதெனி <உணரார்
மானமர் திருவடி படிமிசை உறவே
வந்தெமை ஆண்டிடஇங்கெழுந் தருளும்
மேல்நிமிர் சோலைசூழ் செந்திலம்பதிவாழ்
வேலனே சீலனே விஞ்சையர் கோனே
ஞானவடிவே எமை ஆட்கொண்ட கோவே
நாதாந்தனே பள்ளி எழுந்தருளாயே!

8. ஆதி நடுவும் அந்தம் ஆகியம் நின்றாய்
அரி அயன் அறியார் யாருனை அறிவார்
ஜோதி வடிவம் இருதேவியும் நீயும்
தொல்புகழ் அடியார்க் கருள்செயும் பரனே
ஓதிய மறைபுகழ் உருவினைக் காட்டி
உயர் திருச்சீரலைவாய் நகர்காட்டி
வேதியராவதும் காட்டி வந்தாண்டாய்
விமலனே திருப்பள்ளி எழுந்தருளாயே!

9. வானகத் தேவரும் வழிபடும் நின்னை
மாபொருளே நிதம் வாழ்த்திட என்றும்
மாய இப்புவி தனில் வந்தமர் வாழ்வே
மன்னு செந்தூரா வழி வழியடியோம்
ஊனகத்துலவி நின்றொளிரும் செந்தேனே
ஒளிக்கொளியா யென்றும் பரவும் அடியார்
ஞான அகத்தினில் நன்றொளிரானாய்
நல்லமுதே பள்ளி எழுந்தருளாயே!

10. அவனியிற் பிறந்து நாம் ஆய்வறிவில்லா
ஆனகாலம் வீணாய் போக்கினோம் அவமே
சிவகுமாரா யாங்கள் உய்ந்திட நினைந்து
சீரலைவாய் <உறைவாய் அயன்மாலாம்
புவிதனில் போற்றவும் புகழவும் நின்றாய்
புண்ணியனே நின்கருணையும் நீயும்
தவமிலா சிறியேமை தடுத்தாள வல்லாய்
தயாபரனே பள்ளி எழுந்தருளாயே!

ஓம் ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸுப்ரமண்ய ஸ்வாமியே சரணம்.