1,205 total views, 4 views today
மொச்சை சுண்டல்
என்னென்ன தேவை?
மொச்சை-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-3,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பில்லை, பெருங்காயத்தூள் தாளித்து வேக வைத்த மொச்சை, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.