பாசிப்பருப்பு சுண்டல்
என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு-ஒரு கப்,
பச்சை மிளகாய்-2,
இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு,கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பில்லை,இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துப் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.