Navarathri Recipes – Poomparuppu Sundal

 பூம் பருப்பு சுண்டல்

என்னென்ன தேவை? 

கடலைப்பருப்பு- ஒரு கப், 
கீறிய பச்சை மிளகாய்-ஒன்று, 
காய்ந்த மிளகாய்-2, 
இஞ்சித் துருவல்-அரை டீஸ்பூன், 
மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன், 
கொத்தமல்லி-சிறிதளவு, 
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன், 
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-கால் டீஸ்பூன், 
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,  பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.  தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கினால், பூம்பருப்பு சுண்டல் தயார்.