சிவப்பு காராமணி சுண்டல்
என்னென்ன தேவை?
முளைகட்டிய சிவப்பு காராமணி-ஒரு கப்,
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், கடுகு,
உளுத்தம்பருப்பு-தலா கால்
டீஸ்பூன், கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்,உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
முளைகட்டிய சிவப்பு காராமணியை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை தாளித்து, வேக வைத்த காராமணியை சேர்க்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிய தண்ணீர் தெளித்து(ஒரு ஸ்பூன் அளவு) நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.