Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை

ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும்.

ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை.

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. ‘ராகு கால துர்கா பூஜை’ என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது.

இதில் மிகவும் சிறந்ததாக கருதப்படுவது செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜையாகும். இதற்குரிய தெய்வம் ‘மங்கல சண்டிகா’.

ஒருவருக்கு செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை செவ்வாய்க் கிழமை துர்கா பூஜையாகும். அது மட்டுமின்றி நீண்ட நாட்களாகத் தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து தடையின் நடப்பதற்காகவும் இந்த பூஜை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணமாகத பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும், நல்ல மணாளன் அமையவும் இந்த பூஜையை செய்வார்கள்.

ராகு கால துர்கை பூஜை வழிபாட்டு முறை

  • செவ்வாய்க் கிழமை ராகு நேரத்தில் (In General 3.00 Pm to 4.30 PM. But it varies depending on sunrise of your city) இந்த பூஜையை ஒன்பது வாரங்களுக்கு தொடர்ந்து விரதமிருந்து செய்ய வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஒன்பது வாரங்களுக்குப் பிறகும் தொடர்ந்து பூஜை முறைகளைக் கடைபிடிக்கலாம்.
  • பூஜை அறையை சுத்தம் செய்து, துர்கா தேவி படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரிக்கவும்.
  • பின் ஒரு எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப் திருப்பிப் போட்டு, அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் இடவும். பிறகு அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியை இட்டு, விளக்கு ஏற்றி அன்னை துர்க்கையை வழிபடவும். அப்போது ‘மங்கல சண்டிகா ஸ்தோத்திரம்‘ என்னும் வழிபாட்டு மந்திரப் பாடலைப் பாடி துர்க்கையை வழிபட வேண்டும்.
  • (‘மங்கலன்’ என்பது செவ்வாய் கிரகத்தின் பெயர்களில் ஒன்று. ஆகவே தான் ‘மங்கல சண்டிகா’ என்ற பெயர். செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி வேண்டும் என்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிப்பட்டு கிரக பதவி அடைந்தார்கள் என்பது ஐதீகம். முறையே அவர்களுக்குரிய நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறுகிறது. செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்து தோஷ நிவர்த்தி அடைந்து தேவியின் அருளைப் பெறலாம்.

CLICK HERE TO READ ராகுகால துர்கா அஷ்டகம் – வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்

Rahu Kala Durga Ashtagam in Tamil PDF – Download

மங்கல சண்டிகை ஸ்தோத்திரம்.

தேவீம் ஷோடச வஷியாம் ஸ¤ஸ்த்ர யௌவனாம்
பிம்போஷ்டிம் ஸ¤ததீம் சுத்தாம் ஸரத்பத்ம நிபாநநாம்
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸ¤நீலோத்பல லோசநாம்
ஜகத் தாத்ரீம் ச தாத்ரீம் ச ஸர்வேப்ய: ஸர்வ ஸம்பதாம்
ஸம்ஸார ஸாகரே கோரே ஜ்யோதிரூபாம் ஸதாபஜே
தேவ்யாஸ்ச த்யாநம் இத்யேவம் ஸ்தவநம் ஸ்ருயதாம் முநே

ரக்ஷ ரக்ஷ ஜகந்மாத: தேவீ மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராஸே: ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள த§க்ஷச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்களே த§க்ஷச சுபே மங்கள சண்டிகே
மங்கள மங்களார்ஹேச ஸர்வமங்கள மங்களே
ஸதாம் மங்கள தே தேவீஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்ய மங்களவாரே ச மங்களாபீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மநுவம்ஸஸ்ய ஸந்ததம்
மங்களாதிஷ்டாத்ரு தேவீ ச மங்களாநாம் ச மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷமங்கள தாயினீ
ஸாரே ச மங்களாதாரே பாரே ச ஸர்வகர்மணாம்
ப்ரதி மங்களவாரே ச பூஜ்யே மங்கள ஸ¤கப்ரதே

பலஸ்ருதி

ஸ்தோத்ரேணா நேந சம்பிஷ்ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராஹ¤ காலௌ ச பூஜாம் தத்வ கதர் சிவா
தேவ்யாஸ்ச மங்கள ஸ்தோத்ர ய: ஸ்ருணோதி ஸமாஹித:
தத்மங்களம் பவேத் தஸ்ய ந பவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே

ராகு காலத்தில் வீட்டில் விளக்கு ஏற்றலாமா | Rahu Kala Deepam at Home