Saamiye Saranam Ayyappa Samiye Saranam Ayyappa

சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே
பகவானே பகவதியே தேவனே தேவியே
ஏற்றிவிடய்யா தூக்கிவிடய்யா
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
குயில் கூவும் காலையில் மயிலாடும் வேளையில்
புலிமீது வலம் வரும் ஐயப்பா
தேமாகி வென்றிட பயமில்லை என்றிட
உனைப்பாடி பணிந்தோம் ஐயப்பா (குயில்)

சாமியே ஐயப்போ யைப்போசாமியே
நீரோடும் ஓடையில் நீராடிக்குளித்து
பார்போற்றம் கணபதி பாதங்கள் தொழுதோம்
சாமியே சரணம் யைப்பசரணம்
வேல்கொண்ட முருகனை நெஞ்சாரநினைந்து
வெள்ளிப் பணித்தலைவயன் பாதங்கள் வணங்கி
வேங்கடமலையன் திருவடியின் வேண்டிட நன்மைபெருகிவர
காத்தருள்வாய் தெய்வமே சபரிநாதா (குயில்)

பூஞ்சோலைப் பறவைகள் சரணங்கள் பாட
பூத்தனமலர்கள் பொன் வண்டு இசைக்க
சாமியே சரணம் யைப்ப சரணம்
ஆதாரநாயகனின் அடிமலர் துதிக்க
ஐம்பொலி செயல்களை ஒரு முகமாக்கும்
கலியுக தெய்வம் நிதானய்யா கண்கண்டதெய்வம் நீதானய்யா
ஏழைப்பங்காளனய்யா சபரிநாதா (குயில்)