முருகனுக்கு உகந்த நிறம் என்ன?
நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த தெய்வமாக முருகனை வழிபாடு செய்கிறோம். செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் தான் செவ்வாய் என்ற பெயரும், ஆலய வழிபாட்டில் முருகனுக்கு சிவப்பு நிறத் துணியும், சிவப்பு மலர்களும், சிவப்பு நிற துவரையும் கொண்டு பூஜை செய்யப்படுகிறது. எனவே முருகனுக்கு உகந்த நிறம் சிவப்பு நிறமே ஆகும்.