நோய் தீர்க்கும் தெய்வங்கள்
இந்து சமயத்தில் ஒருவருக்கு வந்துள்ள நோய் தீர அதற்கான குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கினால் உடனடியாக நோய் நீங்கி குணமடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது.
ஒவ்வொரு நோய்க்கும் நிவர்த்தி கிடைக்க எந்தெந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய நோய் தீர்க்கும் தெய்வங்களை வழிபட்டு பயன் பெறுங்கள்.
- முடி நரைத்தல், உதிர்தல் – மகாலட்சுமி, வள்ளி
- கண் பார்வைக் குறைபாடுகள் – சிவபெருமான், விநாயகர், முருகன்
- காது, மூக்கு, தொண்டை நோய்கள் – ஸ்ரீ சுப்ரமணியர்
- ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் குறைபாடுகள், சைனஸ், நிமோனியா – மகாவிஷ்ணு
- இருதயம், மாரடைப்பு நோய் – சக்தி, கருமாரி, துர்க்கை
- அஜீரணம், குடல்வால், அல்சர், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா – தட்சிணாமூர்த்தி, முருகன்
- நீரிழிவு, சிறுநீரகக் குறைபாடு – பழனி முருகன்
- ஆண்களுக்கான் விரை நீக்கம், பால்வினை நோய், மாதவிடாய்க் குறைபாடுகள், கர்ப்பப்பை நோய்கள் -ராஜராஜேஸ்வரி, வள்ளி, ஸ்ரீ ரங்கநாதர்
- மூட்டு வலி, யானைக்கால் நோய் – சக்கரத்தாழ்வார்
- வாதம், கீல்வாதம், பக்கவாதம் – சனி பகவான், சிவபெருமான்
- பித்தம் – முருகன்
- வாயுக் குறைபாடுகள் – ஆஞ்சநேயர்
- எலும்பு வியாதிகள் – சிவபெருமான், முருகன்
- ரத்த சோகை, ரத்த அழுத்தம் – முருகப் பெருமான், செவ்வாய் பகவான்
- நீர் நோய்கள் – சந்திர திரிசனம், விசாலாட்சி
- குஷ்டம், சொறி சிறங்கு – சூரியன், சங்கர நாராயணன்
- அம்மை நோய்கள் – மாரியம்மன்,
- தலைவலி, காய்ச்சல் – விநாயகர், முருகன்
- புற்று நோய் – சிவபெருமான்
- ஞாபகசக்தி குறைவு – விஷ்ணு, பராசக்தி
- நாய்க்கடி – பைரவர்
- விசக்கடி – கோமதியம்மன்