Kanni Rasi Guru Peyarchi Palangal 2018-2019 in Tamil

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019:

அன்பார்ந்த கன்னி ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 08.39 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 3 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 7 ஆம் இடம் 9 ஆம் இடம் மற்றும் 11 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 7 ஆம் இடம் திருமண பந்தத்தை குறிக்கும். 9 ஆம் இடம் உயர் கல்வி, வெளிநாட்டுப் பயணம் மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும். 11 ஆம் இடம் லாபம் மற்றும் விருப்பங்கள் நிறைவேறுவதைக் குறிக்கும்.

கன்னி ராசி – தொழிலும் வியாபராமும்:

தொழிலில் சவால்கள் தென்படுகின்றது. வேலையே கதி என்று இருந்தால் வெற்றி காணலாம். தங்களது ஆளுமை, புதிய பணிகளை தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். தகவல் தொடர்பில் கவனமாக இருக்கவும். மிகுந்த பிரயத்தனத்தினால் உற்பத்தி திறன் காணலாம்.

கன்னி ராசி – பொருளாதாரம்:

பொருளாதாரத்தில் திடீர் உயர்வு உண்டு. ஆனால் ஆடம்பர செலவுகளுக்கும் பஞ்சமில்லை. நண்பர்களுக்கு கொடுத்த பழைய கடனை திரும்ப பெற முடியும்.

கன்னி ராசி – குடும்பம்:

ஒவ்வொன்றுக்கும் குடும்ப நபர்கள் தங்களது உதவியையே எதிர்பார்ப்பர். வார்தைகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்ப சூழலில் அதிகமான சந்தோஷ தருணங்கள் இல்லை.

கன்னி ராசி – கல்வி:

தகவல் தொடர்பு, ஊடகம், சமூக சேவை போன்ற பாடங்களை படிப்பவர்கள் வெற்றி காண்பர். எல்லா விஷயங்களையும் சுலபமாக கிரகித்துக் கொள்ள முடியும். கல்வியில் வெற்றி பெற சரியான திட்டங்கள் தேவை.

கன்னி ராசி – காதலும் திருமணமும்:

அவசர முடிவுகள் வேண்டாம். கூடுமானவரை வாழ்க்கைத் துணையின் தேவைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவும்.

கன்னி ராசி – ஆரோக்கியம்:

வெகு நாளைய உடல் உபாதைகளுக்கு இந்த காலக்கட்டத்தில் நிவாரணம் உண்டு. அனைத்துப் பழ வகைகளையும் பருவத்திற்கு ஏற்றார் போல உட்கொள்ளவும்.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • வீண் செலவுகள்
  • கூடுதல் வேலைப் பளு
  • நீண்ட நாளைய கடன் தொகை வசூலாகுதல்
  • கல்வியில் முன்னேற்றம்

முன்னெச்சரிக்கை:

  • அதிக பிரயத்தனம் தேவைப்படும்.
  • பொருளாதாரத்தில் அதிக கவனம் தேவை.
  • ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும்.

பரிகாரம்:

ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு ஹோமம் செய்யவும்.