கடகம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | Kadagam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள்

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிரகங்கள் ராகுவும் கேதுவும். இவ்விரு நிழல் கிரகங்களுக்கு தனி வீடுகள் என்பது கிடையாது. ஆகவே இந்த கிரகங்கள் 12 ராசி வீடுகளில் எந்த வீட்டில் இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வார்கள்.

போக காரகனான ராகுவும்,ஞான காரகன் ஆன கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள்.

அந்தவகையில், ராகு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்,
கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

சர்ப்ப கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 கடகம் ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கடகம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் கடகம் | Midhunam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

2023 – 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள ராகு – கேது பெயர்ச்சியினால், கடக ராசிக்காரர்கள் எதிலும் எளிமையான வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சில தவறுகள் மூலம் புதிய பரிணாமத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மூலிகை தொடர்பான தொழில்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கதை கட்டுரை போன்ற செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். சிறு சிறு அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த சில பிரச்சனைகளுக்கு முடிவு உண்டாகும். மூத்த உறுப்பினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுகமான சில எதிர்ப்புகள் உண்டாகும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும் தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் கடகம் – பொருளாதாரம் எப்படி இருக்கும்?

பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, தனவரவில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். சொத்துக்கள் சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். தேவையற்ற ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இழுபறியான சில தனவரவு கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் கடகம் – உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

உடல் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அடிக்கடி பயணம் மேற்கொள்வதை குறைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் கடகம் – பெண்களுக்கு எப்படி இருக்கும்?

பெண்களுக்கு, திருமணமான தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொன் பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். புத்திரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் கடகம் – வேலை உத்தியோகம் எப்படி இருக்கும்?

சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் சாதகமான முடிவு உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் உதவி கிடைக்கும். அவ்வப்போதும் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். பணிகளில் பொறுப்புகள் மேம்படும் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெறுவீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் கடகம் – வியாபாரிகளுக்கு எப்படி இருக்கும்?

வியாபாரிகளுக்கு, செய்யும் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் லாபம் உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான மக்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் இணைவின் மூலம் முதலீடுகள் மேம்படும். விவசாயிகளுக்கு, பயிர் விளைச்சலில் ஏற்ற இறக்கமான சூழல் காணப்படும். பாசன வசதிகளின் தன்மைகளை அறிந்து அதற்கேற்ப பயிர் விளைச்சலை மேற்கொள்ளவும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை உருவாக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் கடகம் – அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கும்?

அரசியல்வாதிகளுக்கு, சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பாகையை சூடுவீர்கள். எதிலும் நேர்மையுடன் செயல்படவும். அதிகாரம் கொண்டவர்களின் தொடர்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பதவிக்கான முயற்சிகள் கைகூடும். கலைஞர்களுக்கு, கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் தொடர்பான பயணம் மற்றும் வாய்ப்புகள் கைகூடும். கலைத்துறையை சார்ந்து புதிய கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். தமக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் கடகம் – மாணவர்களுக்கு எப்படி இருக்கும்?

மாணவர்களுக்கு கல்வியில் ஒரு விதமான மந்தத்தன்மையான சூழல் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் கல்வி தொடர்பான சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் கல்விக்கு மீறிய அனுபவத்தை பெறுவீர்கள். ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். மேலும் இலக்குகள் பிறக்கும். பயணம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

கடகம் ராகு கேது பெயர்ச்சி 2023-2025 பரிகாரம்

  • வெள்ளிக்கிழமை தோறும் வாராஹி அம்மனை வழிபாடு செய்து வர சிந்தனை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும்.
  • தந்தை முறையில் உள்ளவர்கள் அல்லது சித்தப்பா வகையினருக்கு உதவுதல்.
  • எந்தவொரு முயற்சியினை தொடங்குவதற்கு முன்பும் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி சிதறு தேங்காய் உடைத்து வழிபட்ட பின்பு தொடங்குதல்.
  • வாராகி துதிகள், வாராகி கவசம் போன்ற வாராகி அம்மனுக்கு உரிய மந்திரங்களை துதித்தல்.