அரிசி வடை
தேவையான பொருட்கள்
அரிசி – அரை கிலோ
உளுத்தம் பருப்பு – அரை பிடி
தயிர் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – சிறிதளவு
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
* அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை இரண்டையும் தயிரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
* பிறகு, கழுவி அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
* அதில் பொடியாக நறுக்கிய கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.