காலிஃபிளவர் வடை
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் – அரை கப் (சுடு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கியது)
கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
கசகசா – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
செய்முறை
* ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
* இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.