ஜாங்கிரி
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – கால் கிலோ
சக்கரை – 2௦௦ கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
ஏலக்காய் – ஐந்து
கலர் பவுடர் – தேவையான அளவு (தேவைபட்டால்)
செய்முறை
உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைத்து கொள்ளவும்.
சக்கரை சிரப் ரெடி செய்து கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய், கலர் சேர்த்து கொள்ளவும்.
மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பக்கத்தில் நுனியில் சிறு துளை செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு போல பிழிந்து நன்கு வேகும் வரை வறுத்து எடுக்கவும்.
எடுத்த பின், இரண்டு நிமிடங்கள் சக்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.