Diwali Recipes – Lattu

பெஸரட் லட்டு

தேவையான பொருட்கள்

பயத்தம்பருப்பு – அரை கப்

சர்க்கரை – அரை கப்

நெய் – கால் கப்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

முந்திரி – பத்து

திராட்சை – பத்து

செய்முறை

கடாயில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.

பிறகு, அதை பவுடர் செய்து கொள்ளவும்.

சர்க்கரையையும் பவுடர் செய்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பு பவுடர், சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், தேவையான அளவு நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

சுவையான பயத்தம்பருப்பு லட்டு ரெடி.