தீபாவளி – மசால் வடை
தேவையான பொருட்கள்
முட்டை கோஸ் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கேரட் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி – இரண்டு டீஸ்பூன்
துவரம் பருப்பு – அரை கப் (ஊறவைத்தது)
பச்சை மிளகாய் – இரண்டு
சீரகம் – அரை டீஸ்பூன்
பட்டை – ஒன்று
சோம்பு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
கடுகு – கால் டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
1.முட்டை கோஸ், கேரட், வெங்காயம், பச்சை பட்டாணி, ஊறவைத்த துவரம் பருப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, பட்டை, உப்பு, கரிவேபில்லை, கொத்தமல்லி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
2.பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல் தட்டி அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்