Diwali Recipes – Munthiri Pakoda

முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள்

முந்திரிப்பருப்பு – ஒரு கப்

கடலை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – ஒரு கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

* அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி பருப்பு, மிளகாய் தூள், உப்பு, நெய், ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துகொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக உதிரியாய் போட்டு மொறு மொறுப்பாக வரும் வரை வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.