சுரைக்காய் அல்வா
தேவையான பொருட்கள்
சுரைக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி துருவியது)
சர்க்கரை – 15௦ கிராம்
நெய் – நான்கு தேகரண்டி
ஏலக்காய் – கால் டீஸ்பூன்
கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு – பனிரெண்டு
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய சுரைக்காய் போட்டு நன்றாக வதக்கி, சர்க்கரை, கலர் பவுடர் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
பிறகு, நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.