சந்திரகா-சூர்யகலா
தேவையானவை:
மைதா – 2 கப்,
பால் கோவா –
2 கப், சர்க்கரை –
2 கப், முந்திரி – 20,
திராட்சை – 20,
நெய் – 1
டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
பால் கோவாவை உதிர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சையை பொரித்துப் போட்டு ஏலப்பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மீதி நெய்யை உருக்கி ஊற்றி, அதில் மைதாவைப் போட்டு சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து ஊறவைக்கவும். மைதாவை சின்னச் சின்ன பூரிகளாக இட்டு, அதில் கோவாவை பூரணமாக வைத்து சோமாஸ் போல் விளிம்பு மடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பிப்பாகு காய்ச்சவும். சோமாஸ்களை சர்க்கரைப் பாகில் போட்டு சில நிமிடங்களில் எடுத்துத் தட்டில் வைக்கவும். இதுவே சந்திரகலா. இதை அரைவட்டமாகச் செய்தால் சூர்யகலா.