Diwali Special Recipes – Panner Fingers

பன்னீர் ஃபிங்கர்ஸ்

தேவையான பொருட்கள்

பன்னீர் – ஒரு கப் (துருவியது)

பாலில் ஊறவைத்த ரவை – கால் கப்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – கால் டீஸ்பூன்

சோயா சாஸ் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

மைதா மாவு – ஒரு டீஸ்பூன்

சோள மாவு – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

* ஒரு கிண்ணத்தில் துருவிய பன்னீர் மற்றும் பல்லில் ஊறவைத்த ரவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

* பிறகு, அதில் மிளகாய் தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, சோயா சாஸ், மைதா மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

* பின், அதில் கொஞ்சம் மாவு எடுத்து இரண்டு கையால் உருட்டி வீரல் கனத்திற்கு உருட்டி வீரல்நிலதிற்கு வெட்டி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி.