புசனிக்காய் அல்வா
தேவையான பொருட்கள்
புசனிக்காய் துருவல் – ஒரு கப்
சர்க்கரை – அரை கப்
ஏலக்காய் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் கலர் – தேவைகேற்ப
நெய் – மூன்று குழிகரண்டி
முந்திரி – பத்து
திராட்சை – பத்து
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு, அதே கடாயில் புசனிக்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக குழைய கிளறவும்.
பிறகு, அதில் நெய் சுற்றி ஊற்றி ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
ஏலக்காய் தூள், மஞ்சள் கலர் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்ததும் கிளறி இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு சாப்பிடவும்.