முளை கட்டிய வெந்தய சுண்டல்
என்னென்ன தேவை?
முளைகட்டிய வெந்தயம் -ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-2, கடுகு,
உளுத்தம்பருப்பு-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
பொடித்த வெல்லம்-2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
முளைகட்டிய வெந்தயத்தை 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை தாளிக்கவும். இதனுடன் வேக வைத்த வெந்தயம், உப்பு சேர்த்தக் கிளறவும். தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் தூவி இறக்கவும். சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு ஏற்ற சுண்டல் இது.