Navarathri Recipes – Navadhaniya Sundal

நவதானிய சுண்டல்



என்னென்ன தேவை? 

வெள்ளை கொண்டக்கடலை, கறுப்பு கொண்டக்கடலை, 
காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, 
சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி-தலா 4 டேபிள்ஸ்பூன், 
கறிவேப்பில்லை- சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு. 

அரைக்க: 

தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன், 
காய்ந்த மிளகாய்-4, 
சோம்பு-கால் டீஸ்பூன், 
பட்டை-சிறிய துண்டு, 
இஞ்சி-சிறிய துண்டு.

எப்படி செய்வது?

முளைகட்டிய தானியங்களை ஒன்றாக வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி,  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை தாளிக்கவும். வெந்த தானியம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை  வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.