சாபுதான சுண்டல்
என்னென்ன தேவை?
ஜவ்வரிசி-ஒரு கப்,
முளை கட்டிய பச்சைப்பயறு-முக்கால் கப்,
கீறிய பச்சை மிளகாய்-2,
இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,
கேரட்-ஒன்று(துருவிக் கொளவும்),
நெய்-ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி-சிறிதளவு,
உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?
ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் அல்லது மிருவாதுவாகும் வரை ஊற வைக்கவும். முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், ஊற வைத்த ஜவ்வரிசி, வெந்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறவும். துருவிய கேரட் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி,(விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.