Purattasi Viratham Scientific Reason

புரட்டாசி மாதம் நான் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன்? – அறிவியல் பூர்வமான தகவல்கள்!

வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும் போது ஏன் புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிடக் கூடாது? பெருமாளை வணங்க செல்வதனால் என்பதற்காகவா? பிறகு ஏன் வேறு மாதங்களில் கோவிலுக்கு செல்லும் போது அசைவம் சாப்பிடுகிறோம்? இந்தபுரட்டாசி மாத விரதம் மற்றும் அசைவம் ஒதுக்குவதன் பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணங்களும், உடல்நலம் சார்ந்த விஷயங்களும் உள்ளடங்கி இருக்கிறது….

காலநிலை வேறுபாடு

புரட்டாசி மாதத்தில் வெயிலும், காற்றும் குறைந்து, மழை ஆரம்பிக்கும் காலமாகும். ஆனால், பூமி குளிரும் அளவு மழை பொழிவு இருக்காது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து இருந்த வெப்பத்தை பூமி குறைக்க ஆரம்பிக்கும்.

சூட்டை கிளப்பிவிடும்

மழை ஆரம்பிக்கும் போது பூமியின் சூடு மெல்ல, மெல்ல குறைந்து, சூட்டை வெளியே கிளப்பிவிடும் காலம் இது. ஆகையால் இது வெயில் காலத்தை விடவும் கெடுதல்தரக்கூடியது.

அசைவம் வேண்டாம்

ஏற்கனவே, பூமியில் இருந்து உஷ்ணம் வெளிவருவதால், இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டையும் அதிகப்படுத்தி, உடல் நலத்தை சீர்கெடுக்கும்.

வயிறு மற்றும் செரிமானம்

இவ்வாறு சூடு அதிகரிப்பதால் வயிறு மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் வேண்டாம் என்று நமது முன்னோர்கள் ஒதுக்கி
இருக்கிறார்கள்.

காய்ச்சல், சளி பிரச்சனை

சரியாக பெய்யாத மழை, மற்றும் தட்பவெப்பநிலை மாறுதல் போன்றவற்றால் நோய் கிருமிகள் தாக்கம் அதிகரித்து காய்ச்சல்,சளி போன்ற உடல்நல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்,
இதை துளசி கட்டுப்படுத்தும். இதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து, பெருமாளுக்கு உகந்த மாதமாய் வைத்து வழிப்பட்டு வந்துள்ளனர்.

முன்னோர்களின் அறிவியல் ஞானம்

வெறுமென எதையும் செய்யாமல், அதற்கு ஓர் கட்டுபாடுகள் வைத்து, மக்கள் அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று தான் இவ்வாறான செயல்களை முன்னோர்கள் செய்துள்ளனர். ஆன்மிகம் என்பதை தாண்டி, அதன் பின்னணியில் மருத்துவம்மற்றும் அறிவியல் இருப்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

Read More:

Purattasi Viratham

Why don’t we eat non veg foods in the month of Purattasi?

Importance of Mahalaya Amavasya in Tamil

Purattasi Viratham Scientific Reason

Purattasi Virathangal in Tamil – புரட்டாசி விரதங்கள்

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…! purattasi masam sirappugal

Purattasi-Story,Significance And Spirituality-தமிழ் மாதங்களில் புரட்டாசி

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் புண்ணியங்கள் பெருகும் மாதமாக இருக்கிறது தெரியுமா?