Vilakku Cleaning Days – விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது. திங்கள் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி குளிர வைத்த பிறகு (சுமார் இரவு 9 – 9.30 மணிக்குள்) விளக்கை துலக்குவது நல்லது. வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநதியட்சணி குடியேறுகிறாள். எனவே விளக்குகளை திங்கள் மற்றும் வியாழன் முன்னிரவிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் துலக்குவதே நல்லது.