சஷ்டியில் மிளகு விரதம் இருக்கும் முறை:
மகா சஷ்டி விரதம் என்பது முருகனுக்காக இருக்கும் விரதங்களில் மிக முக்கியமான விரதம் ஆகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசை முடிந்து வரும் பிரதமை தொட்டு தொடர்ந்து 7 நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த 7 நாட்களும் விரதம் இருப்பவர்கள் அவர்களுக்கு தக்கவாறு வெவ்வேறு விரத முறைகளை கடைப்பிடிக்கின்றனனர். அதில் ஒன்று தான் மிளகு விரதம். இது கொஞ்சம் கடினமான விரத முறையும் கூட. மிகவும் உறுதியான மனப்பாங்கும் வைராக்கியமும் இறை பக்தியும் கொண்டு இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
சஷ்டியில் மிளகு விரதம் இருக்கும் முறை
- சஷ்டி விரதத்தின் முதல் நாள் அன்று – ஒரு மிளகு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும்.
- சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாள் அன்று – 2 மிளகு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும்.
- சஷ்டி விரதத்தின் மூன்றாம் நாள் அன்று – ஒரு மிளகு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும்.
- சஷ்டி விரதத்தின் நான்காம் நாள் அன்று – 4 மிளகு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும்.
- சஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாள் அன்று – 5 மிளகு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும்.
- சஷ்டி விரதத்தின் ஆறாம் நாள் அன்று – 6 மிளகு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும்.
ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்து சஷ்டி விரதத்தின் ஏழாம் நாள் அன்று முருகனுக்கு திருக்கல்யாணம் முடிந்த பிறகு மிளகு விரதத்தை முடித்துவிட்டு படையிலிட்டு உணவு உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
குறிப்புகள்:
- விரதத்தின் போது அதிக அளவு தண்ணியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- முருகனுக்கு அபிஷேகம் செய்த பால் அருந்தலாம்.