Tag «தாயுமானவர் பாடல்கள்»

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அன்பர் நெறி

அன்பர் நெறி அத்துவா எல்லாம் அடங்கச்சோ தித்தபடிச்சித்துருவாய் நின்றார் தெளிவறிவ தெந்நாளோ. 1. மூச்சற்றுச் சிந்தை முயற்சியற்று மூதறிவாய்ப்பேச்சற்றோர் பெற்றஒன்றைப் பெற்றிடுநாள் எந்நாளோ. 2. கோட்டாலை யான குணமிறந்த நிர்க்குணத்தோர்தேட்டாலே தேடுபொருள் சேருநாள் தெந்நாளோ. 3. கெடுத்தே பசுத்துவத்தைக் கேடிலா ஆனந்தம்அடுத்தோ ரடுத்தபொருட் கார்வம்வைப்ப தெந்நாளோ. 4. கற்கண்டால் ஓடுகின்ற காக்கைபோல் பொய்ம்மாயச்சொற்கண்டால் ஓடும்அன்பர் தோய்வறிவ தெந்நாளோ. 5. மெய்த்தகுலங் கல்விபுனை வேடமெலாம் ஓடவிட்டசித்தரொன்றுஞ் சேராச் செயலறிவ தெந்நாளோ. 6. குற்றச் சமயக் குறும்படர்ந்து தற்போதம்அற்றவர்கட் கற்றபொருட் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: தத்துவ முறைமை

தத்துவ முறைமை ஐம்பூதத் தாலே அலக்கழிந்த தோடமறஎம்பூத நாதனருள் எய்துநாள் எந்நாளோ. 1. சத்தமுத லாம்புலனிற் சஞ்சரித்த கள்வரெனும்பித்தர்பயந் தீர்ந்து பிழைக்குநாள் எந்நாளோ. 2. நாளும் பொறிவழியை நாடாத வண்ணம்எமைஆளும் பொறியால் அருள்வருவ தெந்நாளோ. 3. வாக்காதி யானகன்ம மாயைதம்பால் வீண்காலம்போக்காமல் உண்மை பொருந்துநாள் எந்நாளோ. 4. மனமான வானரக்கைம் மாலையாக் காமல்எனையாள் அடிகளடி எய்துநாள் எந்நாளோ. 5. வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணமனக்காட்டைத் திருத்திக் கரைகாண்ப தெந்நாளோ. 6. உந்து பிறப்பிறப்பை உற்றுவிடா தெந்தையருள்வந்து பிறக்க …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அன்புநிலை

அன்புநிலை தக்கரவி கண்ட சரோருகம்போல் என்னிதயம்மிக்கஅருள் கண்டு விகசிப்ப தெந்நாளோ. 1. வானமுகில் கண்ட மயூரபட்சி போலஐயன்ஞானநடங் கண்டு நடிக்குநாள் எந்நாளோ. 2. சந்திரனை நாடுஞ் சகோரபட்சி போல்அறிவில்வந்தபரஞ் சோதியையான் வாஞ்சிப்ப தெந்நாளோ. 3. சூத்திரமெய்ப் புற்றகத்துக் குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ்சித்தனைஎன் கண்ணால் தரிசிப்ப தெந்நாளோ. 4. அந்தரத்தே நின்றாடும் ஆனந்தக் கூத்தனுக்கென்சிந்தை திறைகொடுத்துச் சேவிப்ப தெந்நாளோ. 5. கள்ளனிவன் என்றுமெள்ளக் கைவிடுதல் காரியமோவள்ளலே என்று வருந்துநாள் எந்நாளோ. 6. விண்ணாடர் காணா விமலா பரஞ்சோதிஅண்ணாவா வாவென் றரற்றுநாள் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: ஆனந்த இயல்பு

ஆனந்த இயல்பு பேச்சுமூச் சில்லாத பேரின்ப வெள்ளமுற்றுநீச்சுநிலை காணாமல் நிற்குநாள் எந்நாளோ. 1. சித்தந் தெளிந்தோர் தெளிவில் தெளிவானசுத்த சுகக்கடலுள் தோயுநாள் எந்நாளோ. 2. சிற்றின்பம் உண்டூழ் சிதையஅனந் தங்கடல்போல்முற்றின்ப வெள்ளம்எமை மூடுநாள் எந்நாளோ. 3. எல்லையில்பே ரின்பமயம் எப்படிஎன் றோர்தமக்குச்சொல்லறியா ஊமர்கள்போற் சொல்லுநாள் எந்நாளோ. 4. அண்டரண்ட கோடி அனைத்தும் உகாந்தவெள்ளங்கொண்டதெனப் பேரின்பங் கூடுநாள் எந்நாளோ. 5. ஆதியந்த மில்லாத ஆதிஅ நாதிஎனுஞ்சோதிஇன்பத் தூடே துளையுநாள் எந்நாளோ. 6. சாலோக மாதி சவுக்கியமும் விட்டநம்பால்மேலான ஞானஇன்பம் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: மாதர் மயக்கருத்தல்

மாதர் மயக்கருத்தல் மெய்வீசு நாற்றமெலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப்பொய்வீசும் வாயார் புலையொழிவ தெந்நாளோ. 1. திண்ணியநெஞ் சப்பறவை சிக்கக் குழற்காட்டில்கண்ணிவைப்போர் மாயங் கடக்குநாள் எந்நாளோ. 2. கண்டுமொழி பேசிமனங் கண்டுகொண்டு கைவிலையாக்கொண்டுவிடு மானார்பொய்க் கூத்தொழிவ தெந்நாளோ. 3. காமனைவா வென்றிருண்ட கண்வலையை வீசும்மின்னார்நாமம் மறந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 4. கண்களில்வெண் பீளை கரப்பக் கருமையிட்டபெண்கள்மயல் தப்பிப் பிழைக்குநாள் எந்நாளோ. 5. வீங்கித் தளர்ந்து விழுமுலையார் மேல்வீழ்ந்துதூங்குமதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளோ. 6. கச்சிருக்குங் கொங்கை கரும்பிருக்கும் இன்மாற்றம்வைச்சிருக்கும் மாதர் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: யாக்கையைப் பழித்தல்

யாக்கையைப் பழித்தல் சுக்கிலமும் நீருஞ் சொரிமலமும் நாறும்உடல்புக்குழலும் வாஞ்சையினிப் போதும்என்ப தெந்நாளோ. 1. நீர்க்குமிழி பூணமைத்து நின்றாலும் நில்லாமெய்பார்க்குமிடத் திதன்மேற் பற்றறுவ தெந்நாளோ. 2. காக்கைநரி செந்நாய் கழுகொருநாள் கூடியுண்டுதேக்குவிருந் தாம்உடலைச் சீஎன்ப தெந்நாளோ. 3. செங்கிருமி யாதி செனித்தசென்ம பூமியினைஇங்கெனுட லென்னும் இழுக்கொழிவ தெந்நாளோ. 4. தத்துவர்தொண் ணூற்றறுவர் தாமாய்வாழ் இந்நாட்டைப்பித்தன்நான் என்னும் பிதற்றொழிவ தெந்நாளோ. 5. ஊனொன்றி நாதன் உணர்த்தும்அதை விட்டறிவேன்நானென்ற பாவிதலை நாணுநாள் எந்நாளோ. 6. வேலையிலா வேதன் விதித்தஇந்த்ர சாலவுடல்மாலைவியா பார …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அருளியல்பு

அருளியல்பு ஈனந் தருநா அதுநமக்கு வேண்டாவென்றானந்த நாட்டில் அவதரிப்ப தெந்நாளோ. 1. பொய்க்காட்சி யான புவனத்தை விட்டருளாம்மெய்க்காட்சி யாம்புவனம் மேவுநாள் தெந்நாளோ. 2. ஆதியந்தங் காட்டாமல் அம்பரம்போ லேநிறைந்ததீதில் அருட்கடலைச் சேருநாள் எந்நாளோ. 3. எட்டுத் திசைக்கீழ்மேல் எங்கும் பெருகிவரும்வெட்டவெளி விண்ணாற்றின் மெய்தோய்வ தெந்நாளோ. 4. சூதான மென்று சுருதிஎல்லாம் ஓலமிடும்மீதான மானவெற்பை மேவுநாள் எந்நாளோ. 5. வெந்துவெடிக் கின்றசிந்தை வெப்பகலத் தண்ணருளாய்வந்துபொழி கின்ற மழைகாண்ப தெந்நாளோ. 6. சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயஞ்சோதிப்பூரணதே யத்திற் பொருந்துநாள் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: தன் உண்மை

தன் உண்மை உடம்பறியும் என்னும்அந்த ஊழலெல்லாந் தீரத்திடம்பெறவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 1. செம்மையறி வாலறிந்து தேகாதிக் குள்ளிசைந்தஎம்மைப் புலப்படவே யாமறிவ தெந்நாளோ. 2. தத்துவமாம் பாழ்த்த சடவுருவைத் தான்சுமந்தசித்துருவாம் எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 3. பஞ்சப் பொறியைஉயி ரென்னும் அந்தப் பஞ்சமறச்செஞ்செவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 4. அந்தக் கரணமுயி ராமென்ற அந்தரங்கசிந்தைக் கணத்தில்எம்மைத் தேர்ந்தறிவ தெந்நாளோ. 5. முக்குணத்தைச் சீவனென்னும் மூடத்தை விட்டருளால்அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ. 6. காலைஉயிர் என்னுங் கலாதிகள்சொற் கேளாமல்சீலமுடன் …

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அடியார் வணக்கம்

அடியார் வணக்கம் வெம்பந்தந் தீர்த்துலகாள் வேந்தன் திருஞானசம்பந் தனையருளாற் சாருநாள் எந்நாளோ. 1. ஏரின் சிவபோகம் இங்கிவற்கே என்னஉழவாரங்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்ப தெந்நாளே. 2. பித்தரிறை என்றறிந்து பேதைபால் தூதனுப்புவித்த தமிழ்ச்சமர்த்தர் மெய்புகழ்வ தெந்நாளோ. 3. போதவூர் நாடறியப் புத்தர்தமை வாதில்வென்றவாதவூர் ஐயன்அன்பை வாஞ்சிப்ப தெந்நாளோ. 4. ஓட்டுடன்பற் றின்றி உலகைத் துறந்தசெல்வப்பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ. 5. கண்டதுபொய் என்றகண்டா காரசிவம் மெய்யெனவேவிண்டசிவ வாக்கியர்தாள் மேவுநாள் எந்நாளோ. 6. சக்கர வர்த்தி தவராச யோகியெனும்மிக்கதிரு மூலன்அருள் …