Thayumanavar Songs – கருணாகரக்கடவுள்
6. கருணாகரக்கடவுள் நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விடய கைவல்யமா நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்தமுக்த தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண சதானந்த ஞானபகவ சம்புசிவ சங்கர சர்வேச என்றுநான் சர்வகா லமும்நினைவனோ அற்புத அகோசர நிவிர்த்திபெறும் அன்பருக் கானந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூபசாட் சாத்கார அநுபூதி யநுசூதமுங் கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற் கண்ணூ டிருந்தகுருவே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 1. மண்ணாதி ஐந்தொடு புறத்திலுள கருவியும் …