Tag «27 நட்சத்திர கோயில்கள்»

Nakshatra Song for Birth Star Punar Poosam

புனர்பூசம் : மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள் சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின தூக்கமலத்து அன்னவடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணை அடியே.

Nakshatra Song for Birth Star Rohini

ரோகிணி : எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.

Nakshatra Song for Birth Star Barani

பரணி : கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப் பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே.

Nakshatra Song for Birth Star Ashwini

அசுவினி : தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன் எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும் திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.

Nakshatra Song for Birth Star Pooradam

பூராடம் : நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

Nakshatra Song for Birth Star Thiruvonam

திருவோணம் / ஓணம் : வேதம் ஓதி வெண்நூல் பூண்ட வெள்ளை எருது ஏறி பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.

Nakshatra Song for Birth Star Avittam

அவிட்டம் : எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப் பண்ணின் இடைமொழி பாடிய வானவரதா பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரா திருவேதிக்குடி நண்ணரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.

Nakshatra Song for Birth Star Sathayam

சதயம் :   கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடி இடை இமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று தேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

Nakshatra Song for Birth Star Poorattathi

பூரட்டாதி : முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின் நோக்கும் முறுவலிப்பும் துடிகொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள் படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில் குடி கொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரை கழலே.