Thiruvilayadal Ondranavan Uruvil Irandanavan Song Lyrics in Tamil
ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன்! பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்! பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்! முற்றாதவன்! மூல முதலானவன்! முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்! ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்! அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்! தான் பாதி உமை பாதி கொண்டானவன்! சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்! காற்றானவன், ஒளியானவன்! …