Sabarimalaiyil – Ayyappan Song
சபரிமலையில்…. சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம் கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை…நாமும் கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரி) பாலெனச் சொல்லுவதும் உடலாகும் – அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும் வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்…. இந்த நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும் ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி) வாசமுடைய பன்னீர் அபிஷேகம்… எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் – …