Saranam Solli Koopiduvom Sabarimalai Vasanai – K. Veeramani Ayyappan Songs
சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர சுதன் ஐயப்பனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா || சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை அவனின்றி அவனியிலே அணூவும் அசைவதில்லை …