Tag «navratri prasadam recipes»

Navarathri Recipes – SabuDahana Sundal

சாபுதான சுண்டல் என்னென்ன தேவை?  ஜவ்வரிசி-ஒரு கப்,  முளை கட்டிய பச்சைப்பயறு-முக்கால் கப்,  கீறிய பச்சை மிளகாய்-2,  இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,  கேரட்-ஒன்று(துருவிக் கொளவும்), நெய்-ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி-சிறிதளவு,  உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் அல்லது மிருவாதுவாகும் வரை ஊற வைக்கவும். முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில்  நெய்யை சூடாக்கி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், ஊற வைத்த ஜவ்வரிசி, வெந்த பயறு, உப்பு சேர்த்துக்  கிளறவும். துருவிய …

Navarathri Recipes – Mixd Veg sundal

மிக்ஸ்டு வெஜ் சுண்டல் என்னென்ன தேவை?  முளைகட்டிய ஏதேனும் ஒரு பயறு- ஒரு கப், கேரட்-ஒன்று(துருவிக் கொள்ளவும்),  வெள்ளரித் துண்டுகள்-கால் கப் ,  வேக வைத்த உருளைகிழங்கு துண்டுகள்-கால் கப்  தக்காளி-ஒன்று(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) பச்சை மிளகாய் விழுது-2 டீஸ்பூன்,  சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன்,  கறிவேப்பில்லை-சிறிதளவு,  எண்ணெய், உப்பு- தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பில்லை தாளித்து, காய்கறிகளை சேர்த்துக்  கலக்கவும். இதனுடன் வேக வைத்த பயறு, …

Navarathri Recipes – Rajma Katta Mitta

ராஜ்மா கட்டா மிட்டா என்னென்ன தேவை?  கறுப்பு ராஜ்மா-ஒரு கப்,  பச்சை மிளகாய்-2,  வெல்லம்-சிறிய துண்டு,  எலுமிச்சைச் சாறு-2 டேபிள்ஸபூன்,  தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,  கடுகு,சீரகம்-தலா கால்டீஸ்பூன்,  கறிவேப்பில்லை, நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம்,  கறிவேப்பில்லை, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெந்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வெல்லத்தை சிறிது …

Navarathri Recipes – MulaiKattiya Vendhaya Sundal

முளை கட்டிய வெந்தய சுண்டல் என்னென்ன தேவை?   முளைகட்டிய வெந்தயம் -ஒரு கப்,  காய்ந்த மிளகாய்-2, கடுகு,  உளுத்தம்பருப்பு-தலா கால் டீஸ்பூன்,  கறிவேப்பில்லை- சிறிதளவு,  பொடித்த வெல்லம்-2 டேபிள்ஸ்பூன்,  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய வெந்தயத்தை 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்,  கறிவேப்பில்லை தாளிக்கவும். இதனுடன் வேக வைத்த வெந்தயம், உப்பு சேர்த்தக் கிளறவும். தேங்காய் துருவல், …

Navarathri Recipes – Navadhaniya Sundal

நவதானிய சுண்டல் என்னென்ன தேவை?  வெள்ளை கொண்டக்கடலை, கறுப்பு கொண்டக்கடலை,  காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை,  சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி-தலா 4 டேபிள்ஸ்பூன்,  கறிவேப்பில்லை- சிறிதளவு, எண்ணெய், உப்பு-தேவையான அளவு.  அரைக்க:  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  காய்ந்த மிளகாய்-4,  சோம்பு-கால் டீஸ்பூன்,  பட்டை-சிறிய துண்டு,  இஞ்சி-சிறிய துண்டு. எப்படி செய்வது? முளைகட்டிய தானியங்களை ஒன்றாக வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி,  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை தாளிக்கவும். வெந்த தானியம், …

Navarathri Recipes – Pattani Masala Sundal

பட்டாணி மசாலா சுண்டல்   என்னென்ன தேவை? காய்ந்த பட்டாணி-ஒரு கப்,  இஞ்சி-பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன்,  புதினா, கொத்தமல்லி-சிறிதளவு,  சீரகம்- கால் டீஸ்பூன், எண்ணெய்,உப்பு-தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க:  காய்ந்த  மிளகாய்-3,  பட்டை-சிறிய துண்டு,  ஏலக்காய், கிராம்பு- தலா ஒன்று,  சோம்பு- கால் டீஸ்பூன். எப்படி செய்வது? காய்ந்த படடாணியை 8 மணி  நேரம் ஊறவிடவும். பிறகு,குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில்  வறுத்துப் பொடிக்கவும். வாணலயில்எண்ணெயை சூடாக்கி, சீரகம், தாளித்து ….. …

Navarathri Recipes – Poomparuppu Sundal

 பூம் பருப்பு சுண்டல் என்னென்ன தேவை?  கடலைப்பருப்பு- ஒரு கப்,  கீறிய பச்சை மிளகாய்-ஒன்று,  காய்ந்த மிளகாய்-2,  இஞ்சித் துருவல்-அரை டீஸ்பூன்,  மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்,  கொத்தமல்லி-சிறிதளவு,  தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-கால் டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,  பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் தாளித்து, வேக …

Navarathri Recipes – Pasiparuppu Sundal

பாசிப்பருப்பு  சுண்டல் என்னென்ன தேவை? பாசிப்பருப்பு-ஒரு கப்,  பச்சை மிளகாய்-2,  இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்,  கறிவேப்பில்லை-சிறிதளவு,  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில்  எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு,கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பில்லை,இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு,  உப்பு …

Navarathri Recipes – Kollu Sundal

கொள்ளு சுண்டல் என்னென்ன தேவை? துளைகட்டிய கொள்ளு-ஒரு கப், காய்ந்த மிளகாய்-2,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன்,  கறிவேப்பில்லை- சிறிதளவு,  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு- தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த  மிளகாய், இஞ்சித் துருவல்,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி  இறக்கவும்