Tag «thayumanavar songs»

Thayumanvar Songs – சின்மயானந்தகுரு

4. சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம் அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருகிவிழிநீர் ஆறாக வாராத முத்தியின தாவேச ஆசைக் கடற்குள் மூழ்கிச் சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி தழுதழுத் திடவணங்குஞ் சன்மார்க்க நெறியிலாத் துன்மர்க்க னேனையுந் தண்ணருள் கொடுத்தாள்வையோ துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள் தொழுதருகில் வீற்றிருப்பச் சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே சொரூபாநு பூதிகாட்டிச் செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர் சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே.1 …

Thayumanavar Songs – பொருள் வணக்கம்

3. பொருள் வணக்கம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்காச் சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை சுடராய் எல்லாம் வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி மனவாக் கெட்டாச் சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச் சிந்தை செய்வாம்.1 . யாதுமன நினையுமந்த நினைவுக்கு நினைவாகி யாதநின் பாலும் பேதமற நின்றுயிக் குராகி அன்பருக்கே பேரா னந்தக் கோதிலமு தூற்றரும்பிக் குணங்குறியொன் றறத்தன்னைக் கொடுத்துக் காட்டுந் தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச் சிந்தை …

Thayumanavar Songs – பரிபூரணானந்தம்

2. பரிபூரணானந்தம் வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன மனோவாயு நிற்கும்வண்ணம் வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு மார்கத்தின் இச்சைபோல நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த நினைவையும் மறந்தபோது நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ நெஞ்சந் துடித்தயகுவேன் பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப் பேதைக்கும் வெகுதூரமே பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய பேரின்ப நிட்டை அருள்வாய் பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள் பழுத்தொழுகு தேவதருவே பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. 1. தெரிவாக ஊர்வன நடப்பன …

Thayumanavar Songs Lyrics in Tamil

தாயுமானவர் பாடல்கள் 1. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந் தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய் என்றைக்கு முள்ள தெதுஅது கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங் கருதிஅஞ் …