Tag «top 10 ayyappan songs tamil mp3»

Thaayum appanum neethan Swamy – Lord Ayyappa Songs

தாயும் அப்பனும் நீதான் சாமி தாயும் அப்பனும் நீதான் சாமி தலைவலி தீத்தவனும் நீதான் சாமி தவக்கோலம் கொண்டவனும் நீதான் சாமி தனஞ்செயன் சுதனும் நீதான் சாமி அடியவர் மித்ரனும் நீதான் சாமி அகக் கடவுளும் நீதான் சாமி கரிமலை தேவனும் நீதான் சாமி கருணையுள்ளம் கொண்டவனும் நீதான் சாமி நீலிமலை பாலனும் நீதான் சாமி நினைத்ததை அருள்பவனும் நீதான் சாமி எரிமேலியில் இருப்பதும் நீதான் சாமி எங்கள் குலதெய்வமும் நீதான் சாமி பரம தயாளனும் நீதான் …

Parameswaran vazhum malai – Lord Ayyappa Songs

பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் பரமதயாளன் வாழும் மலை திருப்பதி பல்வளம் அருளும் மலை ஐயப்பன் வாழும் மலை சபரிமலை! சஞ்சலம் தீர்க்கும் சபரியின் மைந்தனே உன் சகோதரன் சுப்பிரமணியன் வாழும் மலை சுவாமிமலை! சுவாமி சரணம் அடியவர்க்கருளும் கலியுகம் தன்னிலே சபரிமலை சாஸ்தாவின் மலை சபரிமலை! சபரிமலையை ஆளும் நாதன் சகல நலன்கள் தரும் குருநாதன்! காக்கும் கரத்தவன் காட்டில் கிடைத்தவன் கற்பூரப் பிரியன் கானகவாசன் கடிதில் வந்தருளும் தவசீலன்!

Swami saranam paadu – Lord Ayyappa Songs

சாமிசரணம் பாடு ஐயன் ஐயப்பன் சரணம் பாடு! சாமிசரணம் பாடு ஐயன் ஐயப்பன் சரணம் பாடு! சோர்வு தீர துயரம் ஓட சரணம் சரணம் பாடு! இரவு பகலும் எந்த நேரமும் ஐயப்பன் புகழைப் பாடு! இதில் சாமி என்பதும் ஐயப்பனே சரணம் என்பதும் ஐயப்பனே! என்றும் ஐயப்பனையே வணங்கி வந்தால் அச்சமும் பயமும் போய் விடுமே! கலியுகவரதன் அவன் கண்கண்டதெய்வம் சபரிமலையில் வாழும் ஐயன்! அன்னதானப் பிரபு அவர் பம்பையில்தான் பிறந்தார்! பந்தளத்தில் தான் வளர்ந்தார்! …

Nee Illamal ulakangal iyangathayya – Lord Ayyappa Songs

நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா! நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா! நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா! பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின் பாவங்கள் தொலைந்தே போகும்! கதியின்றித் தவித்திடும் கன்னிச்சாமி என்றும் கலங்கிட வேண்டாமே ஐயன் காப்பான்! இருமுடி தரித்தவர் எந்த நாளும் உலகில் இன்னல்கள் படமாட்டார் இறைவன் காப்பார்! மறுமையும் இம்மையும் மலங்கள் நீக்கி மக்கள் மனங்களில் அருளாட்சி புரியும் வள்ளல்! பயங்கர பாதையில் நடந்தே செல்வார் காட்டில் பாயும் புலிகூடப் பதுங்கித் தோன்றும்! …

Mukthi Alippavane samiye – Lord Ayyappa Songs

முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம் முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! மூலப்பொருளே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! அனுகூலனே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! ஆனந்த விக்ரஹனே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! கந்தன் தம்பியே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! கவலையைத் …

Sabarimalai Payanathile paattu – Lord Ayyappa Songs

சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க! சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க! சாமி சரணம் சரணம் சரணம் என்றே கோஷம் போடுங்க! குருசாமி பாதையிலே நடந்து வாருங்க! அய்யன் குருநாதன் துணையிருப்பான் சேர்ந்து வாருங்க! சந்தனப் பூ வாசம் அது எங்கே வருகுது! அது ஹரிஹரனின் மைந்தனையே காண வருகுது! குங்கும பூ ஜவ்வாது மனமும் வருகுது! அது ஐயப்பன் மேனியிலே தவழ வருகுது சாமிய புகழ வருகுது! பன்னீரும் திருநீறும் சேர்ந்து வருகுது! அது ஐயனுக்கு அபிஷேகம் …

Swamiyai nambi azhaithal – Lord Ayyappa Songs

ஸ்வாமியை நம்பி அழைத்தால் ஸ்வாமியை நம்பி அழைத்தால் ஸ்வாமி சரணமென்றுள்ளம் நினைத்தால் கைபிடிப்பார் என்றும் கைவிடமாட்டாரே கலியுக வரதனய்யப்பா ஸ்வாமி சபரிகிரீசனய்யப்பா! ஆட்டங்கள் ஆடி அழைத்தேன் சரணம் சொல்லியே பாதம் பிடித்தேன்! நொந்து தெளிந்து விளங்கிய என்னில் மணிகண்ட மாதவனொளியே ஸ்வாமி நீயன்றி ஏது இங்கு வழியே! வாழ்வும் தாழ்வும் கடந்தேனே காப்பாற்று என்று விழுந்தேனே! கர்மத்தின் ஆற்றினில் துடிக்குது என்னுயிர் கரையினைக் காட்டிடு கண்ணால் எந்தன் வாழ்க்கையும் ஓடுது உன்னால்! கானலாய் காண்கின்ற உலகில் புரியாததோர் …

Sabarimalai Sentru Tharisanam Parthalum – Lord Ayyappa Songs

சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் தாளாது என் ஆசை ஐயப்பா தாளாது என் ஆசை ஐயப்பா பண்பான பக்தர்கள் இல்லாததால் இங்கு பசிப்பிணி வாட்டுதே ஐயப்பா. சேயாக நீயும் குருவாக நானும் கூட்டி வந்தேனே ஐயப்பா தீராது தீராது சொன்னாலும் தீராது தீர்க்கும் வழியென்ன ஐயப்பா. அறியாத பக்தர்க்கு மனதோடு உறவாடி அறிவை கொடுத்து அறிய வையப்பா மனமிருந்தால் வழி பிறக்கும் அருளிருந்தால் உனை அறிந்திடுவேன் தர்ம சாஸ்தாவே சபரி ஐயப்பா.

Sakthi Koduppavane Saranam – Lord Ayyappa Songs

சக்தி கொடுப்பவனே சரணம் பொன் ஐயப்பா! சக்தி கொடுப்பவனே சரணம் பொன் ஐயப்பா! சங்கீத பிரியனே சரணம் பொன் ஐயப்பா! கலிகால வரதனே சரணம் பொன் ஐயப்பா! காவி கரையிருப்பவனே சரணம் பொன் ஐயப்பா! அற்புத விக்ரஹனே சரணம் பொன் ஐயப்பா! அன்பான தெய்வமே சரணம் பொன் ஐயப்பா! மோகினியாள் பாலகனே சரணம் பொன் ஐயப்பா! மோகமெல்லாம் தீர்த்திடுவாய் சரணம் பொன் ஐயப்பா! எருமேலி தர்ம சாஸ்தாவே சரணம் பொன் ஐயப்பா! எங்களை நீ காக்க வேண்டும் …