Thayumanavar Songs – மௌனகுரு வணக்கம்
5. மௌனகுரு வணக்கம் ஆசைநிக ளத்தினை நிர்த்தூளி படவுதறி ஆங்கார முளையைஎற்றி அத்துவித மதமாகி மதம்ஆறும் ஆறாக அங்கையின் விலாழியாக்கிப் பாசஇருள் தன்னிழ லெனச்சுளித் தார்த்துமேல் பார்த்துப் பரந்தமனதைப் பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக படாமன்ன மாயைநூறித் தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசச் செங்கைக் குளேயடக்கிச் சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின் திருவருட் பூர்த்தியான வாசமுறு சற்சார மீதென்னை யொருஞான மத்தகச மெனவளர்த்தாய் மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மௌன குருவே. 1. ஐந்துவகை யாகின்ற …