Thiruvembavai Song 13 in Tamil with Meaning
திருவெம்பாவை பாடல் 13 பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய். பொருள்: கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் …