Sani Peyarchi 2017 to 2020 Predictions for Pisces Sign

2017 சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 70/100

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

When is Sani Peyarchi in 2017?

2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும்

எப்போதும் நல்லவழியில் செல்லும் மீன ராசிகாரர்களே..!

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள், அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.

வியாபாரிகளே! முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! 10-ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால், உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். மேலதிகாரி உதவுவார். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.

மாணவ – மாணவிகளே! படிப்பில் அதிக ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே! முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்த உங்களை, கோபுர விளக்கு போன்று ஒளிரச் செய்வதாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.17 முதல் 18.1.19 வரையிலும், 12.8.19 முதல் 26.9.19 வரையிலும் கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.

25.2.20 முதல் 16.7.20 வரையிலும், 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:

29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.

பரிகாரம்:

திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும்.