Sani Peyarchi 2017 to 2020 Predictions for Aquarius Sign

2017 சனிப்பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 90/100

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

When is Sani Peyarchi in 2017?

2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும்

ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாத கும்ப ராசிக்காரர்களே…

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.

நாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே! பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே! கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:

29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.

பரிகாரம்:

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.