மால்புவா
தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்,
பனீர்-2 கப்,
நெய் – 2 கப்,
பால் – 4 கப்,
சர்க்கரை – 2 கப்,
ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள்,
பாதாம், பிஸ்தா (ஊறவைத்து நறுக்கியது)-1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது பனீரில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் மசிக்கவும். அதில் கோதுமை மாவையும் சேர்த்துப் பிசைந்து மிச்சப்பாலையும் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
சர்க்கரையை அரை கப் தண்ணீர் ஊற்றிப் பாகு வைத்து இறக்கவும். ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். நெய்யைக் காயவைத்து கரைத்த மாவை அப்பம் போல ஊற்றி எடுத்து இன்னொரு ஜாரிணியால் அழுத்தி நெய்யைப் பிழிந்து விட்டு ஜிராவில் போடவும். அதில் சில நிமிடங்கள் ஊறியபின் ஜீராவையும் ஜாரிணியால் வடித்து மால்புவாக்களை எடுத்து அடுக்கவும். இதன் மேல் பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும்.