Diwali Special Recipes -Kaala Jamoon

காலா ஜாமூன்

தேவையானவை:

கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 200 கிராம்,
பனீர் – 100 கிராம்,
சர்க்கரை – 300 கிராம்,
மைதா – 2 டேபிள் ஸ்பூன்,
சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை,
நெய் அல்லது எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

கோவாவையும், பனீரையும் சன்னமாகத் துருவவும். அதில் மைதா, சோளமாவை சலித்துப் போட்டு நன்கு மென்மையாகும்வரை பிசையவும். தேவையான அளவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நிரடல், வெடிப்பு இல்லாமல் பிசைந்து மென்மையாக உருட்டி வைக்கவும்.
சர்க்கரையில் கால் கப் தண்ணீர் ஊற்றி திக்காக பாகு காய்ச்சவும். பாகில் சிறிது பால் ஊற்றினால் அழுக்கு, தூசி எல்லாம் மேலே எழும்பி வரும். அதை வடிகட்டி எடுத்துவிட்டு திரும்பக் காய்ச்சி ஏலக்காய்ப் பொடியைப் போட்டு வைக்கவும்.
நெய் அல்லது எண்ணெய்ச் சூடுபடுத்தி ஜாமூன்களை மிதமான தீயில் டார்க் ப்ரவுன் அல்லது கறுப்பாகும் வரை பொரிக்கவும். பாகில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து சில்வர் ஃபாயில் பேப்பரால் அலங்கரிக்கவும்.